சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கருகும் சம்பா பயிர்கள்: முதல்வரின் 10 அம்சத் திட்டம் புதுகைக்கும் விரிவுபடுத்தப்படுமா?

தமிழகத்தில் சம்பா பயிரைக் காப்பாற்ற தமிழக முதல்வர் அண்மையில் அறிவித்துள்ள சலுகைகள் தங்களுக்கும் கிடைக்க வேண்டுமென

News image
Updated On :22 ஜூலை 2025, 10:13 am

ஆா்.மோகன்ராம்

தமிழகத்தில் சம்பா பயிரைக் காப்பாற்ற தமிழக முதல்வர் அண்மையில் அறிவித்துள்ள சலுகைகள் தங்களுக்கும் கிடைக்க வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
 சம்பா பயிரைக் காப்பாற்ற ரூ.69.88 கோடியில் 10 அம்சத் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அண்மையில் அறிவித்தார்.
 அதன்படி காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள மின்பம்பு மோட்டார்களுக்கு கடந்த மாதம் 29-ம் தேதியிலிருந்து பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரம் என நாளொன்றுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வழங்கப்படும், மேலும், இப்பகுதிகளில் உள்ள சுமார் 32 ஆயிரம் டீசல் பம்புகளைப் பயன்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு ஏக்கருக்கு ரூ.600 மானியம் அளிப்பது,பயிர் காப்பீடு,போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
 புதுக்கோட்டை மாவட்டத்திலும் காவிரி-கல்லணை கால்வாய் மூலம் நீர்ப்பாசனம் பெறக்கூடிய சுமார் 12,500 ஹெக்டேர் (31 ஆயிரம் ஏக்கர்) பரப்பளவு உள்ளது. அதில், ஆலங்குடி, அறந்தாங்கி தொகுதிகளைச் சார்ந்த நெடுவாசல், செரியலூர், நெய்வத்தளி, மேற்பனைக்காடு, அரசர்குளம், நாகுடி, சுப்பிரமணியபுரம், கோவிலூர், கறம்பக்குடி ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். இப்பகுதிகளில் சுமார் 500 மின் மோட்டார் பம்புகள் உள்ளன. வழக்கம் போல இந்த ஆண்டும் காவிரி நீரை நம்பி சம்பா நெல் சாகுபடிப் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். தண்ணீர் வராததால் கடுமையான வறட்சி நிலவுகிறது. சம்பா பயிர்கள் கருகிவருகின்றன.
 காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களுக்கு அரசு அறிவிக்கும் எந்த வித சலுகைகளும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காவிரி பாசன விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.
 சம்பா பயிரைக் காப்பாற்ற தமிழக முதல்வர் அண்மையில் அறிவித்துள்ள பலகோடி மதிப்பிலான சலுகைகள்,புதுகை மாவட்டத்திலுள்ள காவிரி-கல்லணை கடைமடைப்பகுதிகளுக்கும் அளிக்க வேண்டும் என ஆயிரக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
 இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய் விவசாயிகள், பாசனதாரர் கூட்டமைப்பு சங்கத்தலைவர் அத்தாணி ராமசாமி கூறியது:
 புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி நீர் பாய்கிறதா என கேள்வி கேட்கும் அதிகாரிகளும் உள்ளனர். டெல்டா மாவட்டங்களுக்கு தமிழக முதல்வர் தற்போது அறிவித்துள்ள ரூ. 69 கோடி சலுகைகளை எங்கள் பகுதிக்கும் வழங்க வேண்டும் என்றார்.
 தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் மு. மாதவன் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தை டெல்டா மாவட்டமாக அரசு அங்கீகரிக்காததே இந்த அவல நிலைக்கு முக்கிய காரணம். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தமிழக முதல்வரின் கவனத்துக்கு இப்பிரச்னையைக் கொண்டு சென்று உடனடியாக அங்கீகரிக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் நெடு நாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.